ADDED : ஜன 30, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் தி.மு.க., சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகராட்சி தலைவர் துரைஆனந்த், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். எஸ்.பி., அர்விந்த் தலைமை வகித்தார். அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசார் எஸ்.பி.,யுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.