
திருப்புத்தூர்: திருப்புத்தூர் மேலத்திருத்தளிநாதர் கோயிலில் சிவனடியார்களால் உழவாரப்பணி நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் நகரின் பழமையான கோயிலாகும். இக்கோயிலில் அப்பர் உழவாரப் பணிக்குழுவினர் நேற்று உழவாரப்பணி மேற்கொண்டனர். கோயில் வளாகத்திலுள்ள களைச்செடிகள், புற்களை அப்புறப்படுத்தினர். விநாயகர், முருகன் சன்னதி, துர்க்கையம்மன்,சிவன் சன்னதிகளில் துாய்மைப்பணி மேற்கொண்டனர்.
சிவகங்கை கருவூலத்தில் பணிபுரியும் 15 பேர் உள்ளடங்கிய இக்குழுவினர் குடும்பத்துடன் மாதம் ஒருமுறை சிவாலயங்களுக்கு தங்களது சொந்த செலவில் பயணித்து உழவாரப்பணிகளை மேற்கொள்கின்றனர். உத்திரகோசமங்கை, சத்திரக்குடி, திருப்புத்தூர், போகளூர், பெரிச்சிக்கோயில், சேத்தூர், மாரியூர், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, காளையார்கோயில் உள்ளிட்ட சிவஸ்தலங்களில் உழவாரப்பணி மேற்கொண்டுள்ளனர்.