ADDED : டிச 13, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க கோரி சிவகங்கையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். சிவகங்கை ஒன்றிய செயலாளர் சாரதி, காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் சேசுராஜ் முன்னிலை வகித்தனர்.
சமூக நீதி பேரவை தென்மண்டல தலைவர் செந்தில்குமார், மாநில துணை தலைவர் காசிநாதன் ஆகியோர் பேசினர்.அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு நிறுவன தலைவர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

