ADDED : மே 23, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் 55, என்பவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
திருப்புவனம் பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் உறவினர்கள் ராஜ்குமாரை தாக்கி அதனை படம் எடுத்து சமூக வலை தளத்தில் பரப்பினர். மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் ராஜ் குமாரை கைது செய்தனர். ராஜ்குமார் வேனில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் பணி செய்து வந்தார்.