/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கவிஞர் சோமசுந்தரனின் கண்கள் தானம்
/
கவிஞர் சோமசுந்தரனின் கண்கள் தானம்
ADDED : ஜன 01, 2024 05:32 AM
தேவகோட்டை; தேவகோட்டை கவிஞர் அரு.சோமசுந்தரன் 88, இறப்பிற்கு பின் அவரது கண்களை தானம் செய்தனர்.
இவர், தேவகோட்டை பள்ளியில் ஆசிரியர், ஆறாவயல் பள்ளி தலைமை ஆசிரியர் பணி ஆற்றினார்.
100க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார். இவரது பயண நுால்கள், ஷேக்ஸ்பியர் தமிழ் மொழி பெயர்ப்பு நுால்கள் -பிரசித்தி பெற்றது. ராமேஸ்வரம் --- காசிக்கு இவரது தலைமையில் முதன் முதலாக பாதயாத்திரை சென்றுள்ளனர்.
இவரது கவிதையை பாராட்டி தமிழக அரசு பொற்கிழி கவிஞர் விருது அளித்தது. மேடைகளில் ராமாயண சொற்பொழிவு ஆற்றினார். இவரது இறப்பிற்கு பின் கண்களை தானமாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள், இவரது கண்களை எடுத்து சென்றனர்.