தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காட்சி பொருளாக மாறிய போலீஸ் செக் போஸ்ட்; கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்படுவதால் சிக்கல்

காட்சி பொருளாக மாறிய போலீஸ் செக் போஸ்ட்; கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்படுவதால் சிக்கல்

காட்சி பொருளாக மாறிய போலீஸ் செக் போஸ்ட்; கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்படுவதால் சிக்கல்


UPDATED : நவ 02, 2025 06:28 AM

ADDED : நவ 02, 2025 04:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2025 06:28 AM ADDED : நவ 02, 2025 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் செக் போஸ்ட்கள் பலவும் காட்சிப்பொருளாக மாறி கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காரைக்குடி காவல் உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, அனைத்து மகளிர், அழகப்பாபுரம், குன்றக்குடி, பள்ளத்துார், செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் மற்றும் குற்றப்பிரிவு என 10 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள, புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள சாக்கோட்டை, புதுவயல், கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி, கொத்தமங்கலம், செங்கரை நாலு ரோடு காரைக்குடி நுழைவு வாயில்களில் போலீஸ் செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செக் போஸ்ட்களில், முறையாக போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு தீவிரமாக நடந்தது.

சில வருடங்களாக பெரும்பாலான செக் போஸ்ட்களில் போலீசார் பணியமர்த்தப்படவில்லை. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் சோதனை செய்யப்படுவதில்லை. போதைப் பொருள், ரேஷன் அரிசி, திருட்டு வாகனங்கள் உட்பட பலவும் எளிமையாக சிவகங்கை மாவட்டத்திற்குள் வந்து செல்லும் நிலை நிலவுகிறது. செக் போஸ்ட்களில் போலீசார் முழு நேர சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போது குற்றச் சம்பவங்கள் முன்னதாகவே தடுக்கப்படுவதோடு போதைப் பொருட்கள் கடத்தல் முழுமையாக தடுக்கப்பட்டது. தற்போது செக் போஸ்ட்களில் போலீசார் இல்லாததால் கடத்தல், அதிகரித்து வருவதோடு இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள செக் போஸ்ட்களில் போதிய போலீசாரை நியமித்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us