ADDED : செப் 22, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,: மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுலை அவதுாறாக பேசியதாக தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிய கோரி சிவகங்கை போலீசில் காங்., நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
நகர் தலைவர் விஜயகுமார் தலைமையில் வட்டாரத் தலைவர்கள் மதியழகன், உடையார், சிதம்பரம், வெள்ளைச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகராஜன், மோகன்ராஜ், காளீஸ்வரி, பழனிச்சாமி, இமய மடோனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.