/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

ADDED : பிப் 14, 2025 07:23 AM
சிவகங்கை: சிவகங்கை தாசில்தார் அலுவலக வாசலில் நின்ற மேலவாணியங்குடி கிராம உதவியாளரை தாக்கியவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே வேம்பங்குடி கார்த்திகேய ராஜா 48. இவர் மேலவாணியங்குடி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கிராம உதவியாளராக (தலையாரி) உள்ளார்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு சாமியார்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கான அடங்கல் பெற வி.ஏ.ஓ., ரஞ்சித்குமாரை சந்தித்தார். அவருக்கான அடங்கலை வி.ஏ.ஓ., வழங்கிவிட்டார்.
இந்நிலையில் அங்கு வந்த சாமியார்பட்டி பாண்டி 55, என்பவர் வி.ஏ.ஓ.,விடமும், கிராம உதவியாளர் கார்த்திகேய ராஜாவிடம் முன்பு வாங்கி சென்றவரின் அடங்கலை தன்னிடம் வழங்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதற்கு வி.ஏ.ஓ., நில உரிமையாளரிடம் அடங்கல் கொடுத்து விட்டோம் எனக்கூறி அனுப்பி விட்டனர். இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு தாசில்தார் அலுவலகம் வந்த பாண்டி, அங்கு நின்றிருந்த கிராம உதவியாளர் கார்த்திகேயராஜாவை தாக்கினார்.
இதை தடுக்க சென்ற மற்றொரு கிராம உதவியாளரையும் தாக்கினார். காயமுற்ற உதவியாளர் கார்த்திகேயராஜா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். சாமியார்பட்டி பாண்டியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.