/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு: போலீசார் விசாரணை

ADDED : ஜூலை 16, 2025 01:19 AM

காரைக்குடி : காரைக்குடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் தீபா 32.இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவரை பிரிந்த இவர், ராமு 40 என்பவருடன் ஜீவா நகர் அந்தோணியம்மாள் காம்பவுண்டில் வசித்து வந்தார். தீபாவும், ராமுவும் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுள்ளனர். நேற்று காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில் இருவருக்கும் மீண்டும் சண்டை நடந்துள்ளது.
அப்போது வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து இருவரும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளனர்.இதில் சமையலறை உட்பட வீடு தீப்பிடித்து எரிந்தது. இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வெளியே ஓடி வந்தனர். ஓட்டு வீடு என்பதால் வீடு முழுவதும் எரிந்ததோடு பக்கத்து வீட்டிலும் பரவியது.
அக்கம்பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காயமடைந்த ராமு,தீபா காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தன்னை கொலை செய்யும் முயற்சியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக, இருவரும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.