/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் திருப்புவனத்தில் வியாபாரி கொலை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
/
கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் திருப்புவனத்தில் வியாபாரி கொலை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் திருப்புவனத்தில் வியாபாரி கொலை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் திருப்புவனத்தில் வியாபாரி கொலை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
ADDED : ஜூலை 28, 2025 03:15 AM
கீழடி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழடி அருகே முக்குடியில் ஜூலை 23ல் மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது குரண்டி கஞ்சா வியாபாரி கணேசனின் உடல் என்பதும் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கேரளா, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா மதுரை திருமங்கலம் வழியாக சிவகங்கை, ராமநாத புரம் மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் கீழடி, கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் ரோந்து சென்று கஞ்சா விற்ற பலரையும் கைது செய்தனர். இதனால் கஞ்சா வியாபாரிகள் பலரும் வேறு இடங் களுக்கு சென்றனர்.
கஞ்சா விற்பனையில் ஒரு முறை ஈடுபட்டால் கூட விற்றவரின் வாகனங் களை போலீசார் பறி முதல் செய்து, வங்கி கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கை களையும் எடுத்தனர். இதனால் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து கஞ்சா வழக்குகள் வரை திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே பதிவாகி வந்தன. ஜூன் 27ல் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, கொலை சம்பவத்திற்கு பின் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் முக்குடியிலுள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான கிணற்றில் வீசப்பட்டிருந்தது குரண்டி கஞ்சா வியாபாரி கணேசனின் உடல் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கஞ்சா வியாபாரிகளான குரண்டி கணேசன், சுரேந்திரன் 33, காரியாபட்டி வாணிகருப்பு 32, பெருங்குடி திருமுருகன் 35, ஆகியோருக்குள் கஞ்சா விற்பதில் மோதல் ஏற்பட்டது.
இப்பிரச்னையில் கணேசனை கொலை செய்து கல்லில் உடலை கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். இதில் ஈடுபட்ட சுரேந்திரன் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.