ADDED : ஜூலை 27, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உள்ளிட்ட 5 சப் டிவிஷன்களில் 49 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்த போலீசார் 205 பேரை அவர்கள் விரும்பிய ஸ்டேஷன்களுக்கு பணி மாறுதல் செய்து எஸ்.பி., சிவ பிரசாத் உத்தரவிட்டார்.