ADDED : நவ 07, 2024 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் பிரச்னைக்குரிய பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணி செய்ய எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு போலீசாரின் வாகன ரோந்து மற்றும் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. சில பிரச்னைக்குரிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டு டூவீலர் மூலம் ரோந்து மற்றும் வாகன தணிக்கை செய்யப்படுகிறது. தொடர்ந்து மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.