/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ 21 ஆயிரத்தை தவறவிட்ட பயணி மீட்ட போலீசார்
/
ரூ 21 ஆயிரத்தை தவறவிட்ட பயணி மீட்ட போலீசார்
ADDED : மார் 19, 2024 11:59 PM
திருப்புத்துார் : சிங்கம்புணரி ஒன்றியம் முறையூரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வீரப்பன். இவர் நேற்று வேலை நிமித்தமாக திருப்புத்துாருக்கு வந்து விட்டு, மீண்டும் மாலை 6:00 மணி அளவில் முறையூருக்கு பஸ் ஏற மதுரை ரோடு பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார்.
அப்போது கையில் வைத்திருந்த பையில் ரொக்கம் ரூ 21,000 மற்றும் ஏடிஎம் கார்டு, வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தார். அந்தப் பையை அருகிலிருந்த டூவீலரில் வைத்துவிட்டு நின்றார். பஸ் வந்ததும் பையை மறந்து விட்டு பஸ்சில் ஏறி சென்று விட்டார். சிறிது துாரம் சென்ற பின் பை இல்லாதது நினைவுக்கு வர பஸ்சிலிருந்து இறங்கி பஸ் ஸ்டாப் வந்தார். அங்கு டூ வீலர் இல்லை. வீரப்பன் டவுன் போலீசில் புகார் செய்தார்.
எஸ்.ஐ., ரவி பஸ் ஸ்டாப் அருகில் விசாரித்த போது முருகன் என்பவர் யாரும் இல்லாததால் பையை எடுத்து பாதுகாப்பாக வைத்திருந்து எஸ்.ஐ.,யிடம் கொடுத்தார்.
பையில் வைத்திருந்த பணம் மற்றும் ஆவணங்கள் அப்படியே இருந்துள்ளது. எஸ்.ஐ.,பையை வீரப்பனிடம் ஒப்படைத்தார். வீரப்பன், பையை பாதுகாத்த முருகனுக்கு நன்றி தெரிவித்தார்.

