ADDED : மார் 04, 2024 05:31 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 1192 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
சுமார் 1 லட்சத்து 11 ஆயிரத்து 763 குழந்தைகளுக்கு 1192 நிரந்தர மையங்களான அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நலமையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களிலும், 61 நடமாடும் மையங்களான 17 பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது.
இம்முகாமில் பொது சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, ஊட்டச்சத்துத்துறை. ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி துறை, கல்வித்துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த 5092 பேர் பணியாற்றினர். என சுகாதார துறை துணை இயக்குநர் விஜய்சந்திரன் தெரிவித்தார்.
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் நேற்று 126 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் முகாமினை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார். பூவந்தி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு பங்கேற்றனர். திருப்புவனம் தாலுகாவில் 126 முகாம்களில் 9 ஆயிரத்து 620 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
