ADDED : அக் 09, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாவட்டத்தில் அக்., 12 அன்று 1270 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 99,979 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகர் நல மையம், அங்கன்வாடி மையம், பள்ளிகள் என 1197 மையங்கள், 54 நடமாடும் மையங்கள் என 1270 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் 5092 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். எனவே 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.