/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் ஏப். 25ல் பொன் ஏர்
/
சிங்கம்புணரியில் ஏப். 25ல் பொன் ஏர்
ADDED : ஏப் 17, 2025 05:36 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் புது மழை பெய்ததால் பொன் ஏர் இட கிராம மக்கள் நாள் குறித்தனர்.
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டின் தொடக்க நாளான சித்திரை முதல் நாளன்று பல்வேறு இடங்களில் பொன் ஏர் இட்டு விவசாயப் பணிகளை துவக்குவது வழக்கம். சிங்கம்புணரியில் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளான சித்திரை ஒன்றாம் தேதிக்கு பிறகு பெய்யும் புதிய மழையை தொடர்ந்து, அதற்குப் பிறகு வரும் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து பொன் ஏர் பூட்டி விவசாயப் பணிகளைத் துவக்குவர்.
இந்தாண்டு தமிழ் புத்தாண்டு அன்று இரவே பரவலாக நல்ல மழை பெய்தது. இதைத் தொடர்ந்து கிராமத்தினர் ஏப். 25ஆம் தேதி காலை 9:00=-10:15 மணிக்குள் பொன் ஏர் பூட்டி விவசாயப் பணிகளை துவக்க முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கிராம முக்கியஸ்தர்கள் ஏர் பூட்டி விவசாயப் பணிகளை துவக்குவர். அதே நேரத்தில் அனைத்து சுற்று வட்டார பகுதியிலும் விவசாயிகள் தங்களது நிலங்களில் வழிபாடு செய்து பொன் ஏர் இட்டு விவசாயப் பணிகளை துவக்குவர்.