/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்குப்பை பாரம்பரிய வீட்டில் 27 குடும்பத்தினரின் பொங்கல் விழா
/
நெற்குப்பை பாரம்பரிய வீட்டில் 27 குடும்பத்தினரின் பொங்கல் விழா
நெற்குப்பை பாரம்பரிய வீட்டில் 27 குடும்பத்தினரின் பொங்கல் விழா
நெற்குப்பை பாரம்பரிய வீட்டில் 27 குடும்பத்தினரின் பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 11:05 PM

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் வங்கியாளரும், ஏற்றுமதி ஆலோசகருமான சேதுராமன் சாத்தப்பன் அவர்களது உறவினர்கள் 27 குடும்பத்தினர் ஒன்று கூடி பாரம்பரிய வீட்டில் பொங்கல் விழா கொண்டாடினர்.
நெற்குப்பையில் உள்ள ராம.சா.ராம., குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் பூர்வீக பாரம்பரிய வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடுவர். இதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர் வந்துவிடுவர்.
இந்த பொங்கல் விழாவில் அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், மும்பை, பெங்களூரூ, கோயம்புத்துார், திருச்சி, சென்னையில் வசிக்கும் 27குடும்பத்தை சேர்ந்த 80 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த பாரம்பரிய வீட்டில்தொடர்ந்து 3 நாட்கள் விழா கொண்டாடுவர்.
பொங்கலை முன்னிட்டு நேற்று ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும், பெண்கள் சோலை அணிந்து பாரம்பரிய முறையில் பங்கேற்றனர்.
வீட்டு முற்றத்தில் வண்ண கோலமிட்டு, சூரிய உதயத்தின் போது பெண்கள் பொங்கல் வைத்தனர். பால் பொங்கும் போது சங்கு முழக்கமும், குலவையிட்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் தாயம், பல்லாங்குழி, பாண்டி ஆடுதல் விளையாடினர். பொங்கல் விழாவில் 3 வது தலைமையினரில் இருந்து 6 வது தலைமுறை வரையிலான குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
குடும்பத்தின் மூத்தவர் சுந்தரம் செட்டியார் 86, முன்னிலையில் விழா நடந்தது. இவ்விழாவை நடத்த ஆண்டு தோறும் இரு இளைஞர்களை தேர்வு செய்வர். அவர்கள் தான் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.
இந்த ஆண்டில் ராஜா, முத்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு, விழா ஏற்பாட்டைசெய்திருந்தனர்.