ADDED : ஜன 16, 2025 05:02 AM
சிவகங்கை: காளையார்கோவில் சேகர் மகன் கோபாலகிருஷ்ணன் 21. பாண்டி மகன் நவீன் நாராயணன் 21. இருவருக்கும் 2021ல் பள்ளியில் படிக்கும்போதே முன்பகை இருந்துள்ளது.
இருவரும் பள்ளி படிப்பை முடித்த நிலையில் நவீன் நாராயணன் கோயம்புத்துாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பொங்கலுக்கு சொந்த ஊரான காளையார்கோவிலுக்கு நவீன்நாராயணன் வந்தார். அப்போது அவரது நண்பர்களுடன் சேர்ந்து திருநகரில் மது அருந்தியுள்ளார்.
அதே பகுதியில் கோபாலகிருஷ்ணனும் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். இரண்டு தரப்பினரும் போதையில் இருந்ததால் பழைய பிரச்னையை மனதில் வைத்துகொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
காளையார்கோவில் போலீசார் நவீன் நாராயணன் தரப்பில் ஸ்டீபன் 19, பிரகாஷ் 22, சிவகங்கை ராகுல் 18, உள்ளிட்ட 16 வயது சிறுவன் மீதும், கோபாலகிருஷ்ணன் தரப்பில் காளீஸ்வரன் 20, யோவின் 20, ஜோஸ்பர் 19, சேகர் 54,கருப்பசாமி 19 ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் காளீஸ்வரன், யோவின், ஜோஸ்பர், கருப்பசாமி, நவீன் நாராயணன், ஸ்டீபன், பிரகாஸ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

