நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார்.
கலை இலக்கியப் பெருமன்ற கிளை தலைவர் சுந்தரமாணிக்கம் வரவேற்றார். கவுரவத் தலைவர் கண்ணப்பன் தொடங்கி வைத்து பேசினார். சிவகங்கை மறை மாவட்ட பேராயர் லுார்து ஆனந்தம் மத நல்லிணக்கம் குறித்து பேசினார். புதுச்சேரி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

