/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையம்மன் கோயிலில் பொங்கல் விழா
/
கோட்டையம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED : ஜூலை 29, 2025 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா 21ந்தேதி  கோயிலில் மேடை  அமைத்தலுடன் தொடங்கியது.
மறுநாள் ஆடி முதல் செவ்வாய்க்கிழமை முதல் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொங்கல் வைத்து பூஜைகள் நடந்தன.
இரண்டாம் செவ்வாய்க்கிழமையான நேற்று பீட அபிஷேகத்தை தொடர்ந்து மதியம் கோயிலில் கோயில் சார்பாக இரண்டாவது பொங்கல் வைத்தனர். தொடர்ந்து புள்ளிப் பொங்கலாக ஆயிரக்கணக்கான பெண்கள் கோயிலைச் சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டனர். கரும்பு தொட்டிலில் குழந்தைகளை வைத்து கோயிலை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

