/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழச்சிவல்பட்டியில் பொங்கல் விழா
/
கீழச்சிவல்பட்டியில் பொங்கல் விழா
ADDED : ஜன 18, 2025 07:34 AM
கீழச்சிவல்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம்கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்றத்தினர் சார்பில்பொங்கல் விழா துவங்கியது.
கீழச்சிவல்பட்டியில் தமிழ்மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கலை அடுத்து 3 நாட்கள்விழா நடத்தப்படும். பாடுவார் முத்தப்பர் கோட்ட அரங்கத்தில் முதல் நாளில் ராமனாதன் வரவேற்றார். செயலர் பழனியப்பன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்து 'அன்பின் முகவரியே இல்லறம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ராங்கியம் அனுமான் சிவா, பி.ஆர்.சந்தரம், லெ.கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சி.டி.வள்ளியப்பன், தாசில்தார் மாணிக்கவாசகம் வாழ்த்தினர்.
'குடும்பத்தின் மகிழ்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருப்பது ஆண்களின் உழைப்பே, பெண்களின் பொறுப்பே' என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது. கவிஞர் அரு.நாகப்பன் நடுவராக பணியாற்றினார். கோபால், செந்தமிழ் திலகம், லெட்சுமிநாராயணன், சரஸ்வதி நாகப்பன், வாசுகி வாதிட்டனர். முன்னதாக தமிழ் மன்றம் டி.அழகப்பனின் படம் திறந்து வைக்கப்பட்டது. கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாட்டினை தமிழ்மன்ற செயலர்கள் எஸ்.எம்.பழனியப்பன், பழ.அழகுமணிகண்டன், எஸ்.அழகப்பன், எம்.சொக்கலிங்கம் செய்தனர்.