/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொங்கல் பரிசு தொகுப்பு புகார் தெரிவிக்க எண் : கலெக்டர் தகவல் கலெக்டர் தகவல்

ADDED : ஜன 09, 2024 12:12 AM
சிவகங்கை, : ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் இருப்பின், கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 829 ரேஷன் கடைகள் மூலம் ஜன., 10 முதல் அரிசி வாங்கும் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி, ரூ.1000 ரொக்கம், வேட்டிசேலை வழங்கப்பட உள்ளது.
ஜன., 9 வரை அந்தந்த ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் இருந்தால், பொதுமக்கள் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் அந்தந்த தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம், என்றார்.