நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை நிரதலமுடைய அய்யனார் சோனையா சுவாமி கோயிலில் தை கடைசி வெள்ளியன்று சுவாமிகளுக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை மானாமதுரை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.