ADDED : ஜன 15, 2024 11:15 PM

தேவகோட்டை : மகா சங்கராந்தி, பொங்கல் விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சியம்மன் சந்நிதியில் பொங்கல் வைத்து சுவாமி அம்பாளுக்கு அங்கிகள் சாற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன.
* வெளிமுத்தி விலக்கு பட்டுக்குருக்கள் நகரில் பிருத்தியங்கிரா தேவி கோயிலில் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
* தி.ராம.சாமி. கோயிலில் காலையில் பொங்கல் வைத்து வேலிற்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. மாலையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன.
* நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் அதிகாலையில் பொங்கலிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
* சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் , துர்க்கை அம்மன், திருக்கயிலேஸ்வரர், அய்யப்பன், முத்துக்குமாரசுவாமி பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
* ஆதிசங்கரர் கோயிலில் ஆதிசங்கரர், விஸ்வநாதர் சிறப்பு பூஜைகள் நடந்தன. புவனேஸ்வரி அம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில், சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், தர்ம முனீஸ்வரர் கோயில், ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.