நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டையில் இருந்து பழனிக்கு நாளை புறப்படும் நகரத்தார் காவடிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
தேவகோட்டையில் இருந்து ஆண்டுதோறும் தைப்பூச விழாவிற்காக நகரத்தார்கள் காவடி ஏந்தி, பழனிக்கு பாதயாத்திரை செல்வார்கள். இந்த ஆண்டு தைப்பூசத்திற்காக நாளை பாதயாத்திரையை துவக்குகின்றனர்.
இதற்காக நேற்று காவடிகளுக்கு நகர பள்ளிக்கூடத்தில் உள்ள விநாயகர் சன்னதில் வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். முருகனை போற்றி அரோகரா பாடினர்.

