நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : ந.வைரவன்பட்டியில் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு இன்று அஞ்சல் தலை,தபால் உறை கண்காட்சி நடைபெறுகிறது.
அருங்காட்சியக நிறுவனர் பழனியப்பன் முன்னிலையில் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ஏ.டி.விக்டர் துவக்கி வைத்து அஞ்சல்தலை,தபால் உறை குறித்து பேசுகிறார். கண்காட்சி காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 3:00 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி.