UPDATED : அக் 09, 2026 04:50 PM
ADDED : அக் 09, 2026 04:46 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் தேசிய தபால் வார விழா கடைபிடிக்கப்படுவதாக கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:நடப்பு ஆண்டு தேசிய தபால் வார விழா அக்., 9 முதல் 15 வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வ மகள் சேமிப்பு கணக்கு உட்பட அனைத்து வகை தபால் சேமிப்பு கணக்கு துவக்கவும், அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் சேரவும் பாலிசிகளை புதுப்பிக்கவும், புதிய ஆதார் எடுத்தல், திருத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தபால் திட்டங்களை செயல் படுத்தலாம் என்றார். ///
