/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2024 04:58 AM

சிவகங்கை: மதுரை திருப்பரங்குன்றம் தபால் அலுவலர் சுமதிக்கு, பணிச்சுமையுடன் மிரட்டல் விடுத்த கோட்ட ஆய்வாளரை கண்டித்து சிவகங்கை, காரைக்குடியில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் முருகன், தபால்காரர்கள் சங்க மாநில உதவி பொருளாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். அஞ்சல் புறநிலை ஊழியர் சங்க கோட்ட தலைவர் அம்பிகாவதி நன்றி கூறினார்.
காரைக்குடி தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்.எப்.இ.இ., சங்க கோட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் முருகன், என்.எப்.இ.இ., சங்க கோட்ட செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.