/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அ.தி.மு.க., குறித்து போஸ்டர் யுத்தம்; போலீசில் இரு தரப்பினர் புகார்

ADDED : ஜன 05, 2025 11:58 PM
சிவகங்கை; சிவகங்கையில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ.,வை மாற்றக்கோரி ஒட்டிய போஸ்டருக்கு, அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு குழுவினர் தான் காரணம் என அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்த நிலையில், நேற்று பன்னீர்செல்வம் அணியினரும் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கையில் ஜன. 2ல் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. இது குறித்து பன்னீர்செல்வம் அணியினர் சமூக வலைதளங்களில் பரப்பினர். இதையடுத்து அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் கட்சியினர் சிவகங்கை எஸ்.பி.,யிடம், பன்னீர் செல்வம் அணியினர் மீது புகார் அளித்தனர்.
இந்நிலையில் உட்கட்சி பூசலில் எங்கள் அணி நிர்வாகி மீது அ.தி.மு.க., வினர் வேண்டும் என்றே புகார் அளித்ததாக கூறி, நேற்று அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அக்கட்சியினர் புகார் அளித்தனர். இருதரப்பு புகார் குறித்தும் சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் அன்னராஜ் கூறியதாவது, அ.தி.மு.க., வினர் புகாரின் மீது நடத்திய விசாரணையில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினர் சமூக வலைதளங்களில் வந்ததை மட்டுமே பகிர்ந்ததாகவும், போஸ்டர் ஒட்டியது குறித்து தெரியாது என தெரிவித்து விட்டனர். இரு தரப்பு புகார் குறித்தும் விசாரிக்கிறோம், என்றார்.