ADDED : அக் 26, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் 53. இவர் சோழபுரத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக உள்ளார்.
நேற்று முன் தினம் இரவு 9:30 மணிக்கு வீட்டிற்கு அருகில் சென்றபோது, மின்னல் தாக்கி அதிர்ச்சியில் இறந்தார். இவருக்கு ஏற்கனவே இருதய நோய் பாதிப்பு இருந்துள்ளது. சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.