/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழையால் மண்பாண்ட தொழில் பாதிப்பு
/
மழையால் மண்பாண்ட தொழில் பாதிப்பு
ADDED : ஜன 08, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரையில் பெய்த மழையால் மண்பாண்ட தொழிற்கூடங்களை மழை நீர் சூழ்ந்ததால்பானை தயாரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்று வருகின்றனர். தற்போது வர இருக்கின்ற பொங்கல் பண்டிகைக்காக தொழிலாளர்கள் பொங்கல் பானைகளை தயாரித்து வந்தனர்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு மானாமதுரையில் அரை மணி நேரம் பெய்த மழையினால் மண்பாண்ட தொழில் கூடம் முன் மழை நீர் தேங்கியதால் பானை தயாரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.