ADDED : ஜன 28, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள தெற்கு கீரனுாரில் இருந்து அரியாண்டிபுரம் செல்லும் பாதையில் உள்ள வயல்களில் பம்ப் செட்களுக்கு கடந்த 2 மாதமாக மின் சப்ளை இல்லாததால் பருத்தி மற்றும் மிளகாய் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் பம்ப் செட்களுக்கு டிரான்ஸ்பார்மரில் இருந்த பழுதை நீக்கி மின்சப்ளை வழங்கினர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.