ADDED : பிப் 21, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை- மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற மாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
உற்ஸவர் சோமநாதர் சுவாமி ஆனந்தவல்லி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பிரகாரத்தை வலம் வந்தனர். மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.