நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, -தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து நந்திக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், பிரதோஷ நாயனார் கோயிலில் உலாவும் நடைபெற்றன.
நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை, திருக்கயிலேஸ்வரர் கோயிலில் சுவாமி நந்திக்கு சிறப்பு பூஜை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் நந்தீஸ்வரருக்கும் சுவாமிக்கும், வெளிமுத்தி பழம்பதிநாதர் கோயிலில், தேவகோட்டை கவுரி கைலாசநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.