/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தவறவிட்ட ரூ.1.84 லட்சம் ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
/
தவறவிட்ட ரூ.1.84 லட்சம் ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
தவறவிட்ட ரூ.1.84 லட்சம் ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
தவறவிட்ட ரூ.1.84 லட்சம் ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
ADDED : டிச 08, 2024 06:06 AM

தேவகோட்டை : தவறவிட்ட பணத்தை எடுத்து கொடுத்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
தேவகோட்டை மாந்தோப்பு வீதியில் வசிப்பவர் ராம்குமார். இவரது மகள் நிஷாந்தினி 11., தேவகோட்டை பெத்தாளாச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் தந்தையும் மகளும் ராம்நகர் வந்துவிட்டு தேவகோட்டைக்கு திரும்பினர்.
கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வரும்போது ரோட்டில் கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதை கவனித்த மாணவி நிஷாந்தினி தந்தையிடம் கூறியதை தொடர்ந்து இருவரும் பையை எடுத்து பார்த்ததில் அதில் பணம் இருந்தது அருகில் இருந்த டி.எஸ். பி. அலுவலகத்தில் கொடுத்தனர். போலீசார் பையை பார்த்த போதுரூ.ஒரு லட்சத்து 84 ஆயிரம் பணமும் சில ஆவணங்களும் இருந்தன.
பணத்தை தவற விட்ட கல்லங்குடியைச் சேர்ந்த மாணிக்கம் டி.எஸ். பி.அலுவலகத்திற்கு புகார் செய்ய வந்தார். போலீசார் மாணிக்கம் கூறிய ஆதாரங்களை சரிபார்த்தனர். இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. கவுதம் முன்னிலையில் பணத்தை தவறவிட்ட மாணிக்கத்திடம் மாணவி நிஷாந்தினி பணப்பையை ஒப்படைத்தார்.
நேர்மையாக பணத்தை எடுத்து கொடுத்த மாணவி நிஷாந்தினி, அவரது தந்தைக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார்.