தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கரும்பு வயலில் தீ விபத்து தவிர்க்க முன்னெச்சரிக்கை

 கரும்பு வயலில் தீ விபத்து தவிர்க்க முன்னெச்சரிக்கை

 கரும்பு வயலில் தீ விபத்து தவிர்க்க முன்னெச்சரிக்கை


ADDED : ஜன 27, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி பகுதி யில் கரும்பு வயல்களில் தீ விபத்தை தடுக்க ஆலை நிர்வாகம் சார்பில் இந்தாண்டு முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் ஏக் கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கரும்பு பயிரிடுகின்றனர்.

கரும்பு பயிரிட்ட 10 வது மாதத்தில் இருந்து கரும்பு அறுவடை தொடங்கும், திருப்பாச்சேத்தி சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனம் மூலமே கரும்பு பயிரிடப்படுகிறுது.

எனவே மோட்டார் பம்ப்செட்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. கரும்பு வயல் களுக்கு இடையே மின் கம்பிகள் வெயில் காரணமாக தாழ்வாக செல்வது வழக்கம், நன்கு விளைந்த கரும்பில் தோகைகள் காய்ந்து காணப்படும்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறந்து வயல்களில் காய்ந்த தோகைகளில் விழுந்து தீவிபத்து ஏற்படுவது வழக்கம், கரும்பு வயல்கள் முழுவதும் தோகைகளால் நிரம்பி இருப்பதால் தீ மளமளவென பரவி கரும்பு வயல்கள் தீயில் எரிந்த நாசமாகி வந்தன.

அதன்படி கரும்பு வயல்கள் வழியாக மிகவும் தாழ் வாக செல்லும் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசா வண்ணம், மின்வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் மட்டும் சுமார் 100 இடங் களுக்கும் மேலாக தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us