ADDED : பிப் 16, 2024 05:29 AM
சிவகங்கை: திருப்புத்துார் ஆர்.சி., பாத்திமா நடுநிலை பள்ளியில் நாளை (பிப்.,17) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
அன்று காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 2,000 பேருக்கு வேலை வழங்க உள்ளனர்.
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., கல்வித்தகுதி உடைய அனைவரும் பங்கேற்கலாம். முகாமை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைக்கிறார்.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் சுயவிபரம், கல்வி சான்று, ஆதார் அட்டை நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் ''http://bitly/svgjobfaire1'' என்ற வெப்சைட்டில் முன்பதிவு செய்ய வேண்டும்.
முகாமில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்கள் ''http://bitly/svgemprg'' என்ற வெப்சைட்டில் பதிவு செய்வது அவசியம்.