UPDATED : நவ 22, 2026 06:04 PM
ADDED : நவ 22, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் சார்பில் நடந்த ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சங்க தலைவர் குமரப்பன் தலைமையில் நடந்தது.
பேராசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார். செயலாளர் குருசாமி அறிக்கை வாசித்தார். ஆசிரியை ஜமீமா ஜாஹீர் அறிக்கை வாசித்தார். ஆசிரியை ரத்தினம் யோகா நடத்தினார். ரோட்டரி பட்டய தலைவர் ராமநாதன், டாக்டர் கிருஷ்ணன் சிறந்த நடையாளர் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.ரோட்டரி தலைவர் திருவேங்கடம், காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் நிட்டில், முதல்வர் ராஜன், பொருளாளர் சந்திரன் பேசினர்.
