நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை செர்டு தொண்டு நிறுவன திருவள்ளுவர் இளைஞர் சுய உதவி குழு ஆண்டு விழாவை முன்னிட்டு 10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரி சளிப்பு விழா தலைவர் தேவதாஸ் தலைமையில் நடந்தது.
செயலாளர் நாக லிங்கம் முன்னிலை வகித்தார். உதவி செய லாளர் அடைக்கலம் வரவேற்றார். செர்டு தொண்டு நிறுவன இயக்குனர் பாண்டி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மோகன், ஆசிரியை மீனாட்சி, நகராட்சி கவுன்சிலர் நதியா பரிசுகளை வழங்கினர்.
உதவி தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

