/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்கள் பேச்சு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு
/
மாணவர்கள் பேச்சு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு
மாணவர்கள் பேச்சு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு
மாணவர்கள் பேச்சு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு
ADDED : நவ 20, 2025 04:15 AM
சிவகங்கை: காந்தி, நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றினை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி வழங்கினார்.
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கென மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது.
இதில் முதலிடம் காரைக்குடி டி.டி., நகர் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி கே.சுகப்பிரியா, 2ம் பரிசு சின்னவேங்காவயல் அரசு நடுநிலை பள்ளி 7 ம் வகுப்பு மாணவி கே.கோகுலஸ்ரீ, 3 ம் பரிசு காளையார்கோவில் சரஸ்வதி விகாஷ் மெட்ரிக் பள்ளி 7 ம்வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா ஸ்ரீ, சிறப்பு பரிசு வி.மலம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவி ஆர்.விஜி, காரைக்குடி முத்துப்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி பி.சுவாதிகா பெற்றனர்.
* கல்லுாரி மாணவர் பேச்சு போட்டியில் முதலிடம் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி எம்.காம்., மாணவர் என்.கோபிநாயகம், 2 ம் பரிசு காரைக்குடி அமராவதிபுதுார் ஸ்ரீராஜராஜன் பி.எட்., கல்லுாரி மாணவர் கே.நரேந்திரன், 3 ம் பரிசு காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி மாணவி ஏ.மாதரசி பெற்றனர்.
* முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடந்தது. பள்ளி மாணவர் பிரிவில் முதலிடத்தை மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி 8ம் வகுப்பு மாணவி யு.ஹர்ஷினி, 2 ம் பரிசு காரைக்குடி கோட்டையூர் சி.சி., மகளிர் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவி ஆர்.அபிநயா, 3 ம் பரிசு காரைக்குடி டி.டி.,நகர் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி 9ம் வகுப்பு மாணவி பிஎல்., சந்தோஷிகா பெற்றனர். சிறப்பு பரிசினை கீழப் பூங்குடி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி 8 ம் வகுப்பு மாணவி கே.சுஜித்ரா, அரளிக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி 7 ம் வகுப்பு ஆர்.கிர்த்திகாஸ்ரீ பெற்றனர்.
கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் முதலிடம் காரைக்குடி அழகப்பா பல்கலை எம்.ஏ., மாணவர் பி.ஜோஷி அபர்ணா, 2 ம் இடம் எம்.காம்., என்.நவீன், 3ம் இடத்தை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி பி.ஏ., 3ம் ஆண்டு மாணவர் ஐ.வல்லரசு பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.5,000, 2 ம் பரிசு தொகை ரூ.3,000, 3ம் பரிசு தொகை ரூ.2,000, சிறப்பு பரிசு தொகை ரூ.2,000 வீதம் மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி வழங்கினார். தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.

