UPDATED : செப் 07, 2026 09:41 PM
ADDED : செப் 07, 2026 09:40 PM
சிவகங்கை:சிவகங்கை நகராட்சியில் சர்வர் பிரச்னையால் பிறப்பு இறப்பு சான்றிதழுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்து வாரக்கணக்கில் 200க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பிறப்பு இறப்பு குறித்த பதிவுகளுக்கு நகராட்சியை அணுகும் சூழல் உள்ளது. நகராட்சியில் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பெற்றோர் இனிஷியல் திருத்தம் செய்வதற்கும் இறப்பு குறித்த பதிவுகளுக்கும் தினசரி 10க்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர்.
இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து ஆன்லைன் சான்றொப்பம் இடுவதற்கு சர்வர் பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடிப்பதால் நகாட்சியில் 200க்கும் மேற்பட்டோர் விண்ண்பித்து காத்திருக்கின்றனர். இதனால் பள்ளி கல்லுாரி மாணவர்கள், பாஸ்போர்ட், ஆதார், வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவை விண்ணப்பிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சர்வர் பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த பிரச்னையை அரசு தான் சரி செய்ய வேண்டும். அரசு சரி செய்து விட்டால் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக சான்றிதழ் வழங்கப்படும் என்றனர்.
