/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல் கொள்முதல் மையத்தில் பிரச்னை திறந்தும் செயல்படுவதில் சிக்கல்
/
நெல் கொள்முதல் மையத்தில் பிரச்னை திறந்தும் செயல்படுவதில் சிக்கல்
நெல் கொள்முதல் மையத்தில் பிரச்னை திறந்தும் செயல்படுவதில் சிக்கல்
நெல் கொள்முதல் மையத்தில் பிரச்னை திறந்தும் செயல்படுவதில் சிக்கல்
ADDED : பிப் 09, 2024 04:41 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் தற்காலிக நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டும் கூலி தொழிலாளர்கள் சம்பள பிரச்னை காரணமாக இன்னமும் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இந்தாண்டு தற்போது தான் ஒவ்வொரு பகுதியாக இரண்டு அல்லது மூன்று நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022ல் 63 தற்காலிக நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 60 மெட்ரிக் டன் நெல்லும், 2023ல் 54 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்தாண்டு நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாத நிலையில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து நேற்று முன்தினம் திருப்புவனம் நெல்முடிகரையில் தற்காலிக நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை துாற்றி, சுத்தம் செய்து எடை போட்டு லாரிகளில் ஏற்றி இறக்குவதற்கு ஒரு மூடைக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம், அரசின் குறைந்த பட்ச தொகை கூலி தொழிலாளர்களுக்கு கட்டுப்படியாகாத நிலையில் விவசாயிகளிடம் இருந்து 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை சுமை துாக்கும் கூலி தொழிலாளர்கள் வாங்குவது வழக்கம், திருப்புவனம் நெல்முடிகரை தற்காலிக நெல் கொள்முதல் மையத்தில் 15 சுமை துாக்கும் பணியாளர்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற நிலையில் ஒரு மூடைக்கு 40 ரூபாய் வரை தொழிலாளர்கள் கேட்பதால் மையம் செயல்பட வில்லை. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

