/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராபைட் திட்டத்திற்கு எதிராக போராட்டம்
/
கிராபைட் திட்டத்திற்கு எதிராக போராட்டம்
ADDED : ஜன 21, 2026 05:33 AM
பூவந்தி: இலுப்பகுடியில் கிராபைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன் அனைத்து போராட்டத்திலும் பங்கேற்பதாக தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய அவர் கிராபைட் தொழிற்சாலைக்கான முதல் கட்ட ஆய்வு பணி நிறைவடைந்த நிலையில் அதனை முற்றிலுமாக மத்திய, மாநில அரசு கைவிட வேண்டும், கிராபைட் தொழிற்சாலைக்கு எதிராக மனு கொடுத்தால் மத்திய, மாநில அரசு மாறி மாறி கை காட்டுவதாக குற்றம் சாட்டினார். ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டத்தில் கிராபைட் தொழிற்சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும், பிப்ரவரியில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்டவை நடத்தப்படும். கிராபைட் தொழிற்சாலையால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்,என்றார்.

