ADDED : அக் 09, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரண்மனை வாசலில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஊதிய உயர்வை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கார்த்திக்ராஜா, மாநில குழு உறுப்பினர் வேதராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார்.
மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் காளிதாஸ், மாநில பொருளாளர் சாமிவேல், தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவிப் பணி தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.