ADDED : ஜூலை 30, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை பாலர் விடுதியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட செஞ்சிலுவை சங்க ஆலோசகர் பகீரதநாச்சியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுந்தரராமன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு கல்வி உதவி பொருட்கள் வழங்கிய செங்கையா, ராமசாமி குடும்பத்தினரை கவுரவித்தனர். செயலாளர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமசந்திரன், துணை தலைவர் முத்துப்பாண்டியன், பொறுப்பாளர்கள் ராஜா, சரவணன், மலர்மன்னன், சாஸ்தா சுந்தரம், கிருஷ்ணவேணி, கிரிஜா ஆகியோர் பேசினர். காப்பக கண்காணிப்பாளர் ஆண்டாள் நன்றி கூறினார்.