/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
/
அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜன 04, 2026 06:03 AM
சிவகங்கை: சிவகங்கை சமத்துவபுரம், சீனிவாசா நகர் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான வடிகால் அமைக்க கோரியும் நீண்ட நாட்களாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் மதுரை தொண்டி ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை சமத்துவபுரம், சீனிவாசா நகர், அண்ணா நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் கிடையாது. சாலைகளும் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீட்டின் முன் குழி தோண்டப்பட்டு சிலர் கழிவுநீரை விடுகின்றனர். இந்த குழி நிரம்பியவுடன் கழிவுநீர் ரோட்டில் ஓடும் நிலை உள்ளது.
தற்போது சமத்துவபுரம் பகுதியில் புதிதாக ரோடு போடப்பட்டு வருகிறது. இந்த ரோட்டின் குறுக்கே முறையாக கழிவுநீர் மழைநீர் செல்ல வடிகால் அமைக்காமல் அமைக்கப்படுவதாகவும், தங்கள் பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்க கோரியும் நேற்று வேலுநாச்சியார் மணிமண்டபத்திற்கு அமைச்சர் கலெக்டர் வரும் நேரத்தில் மதுரை தொண்டி சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., கண்ணன், தாசில்தார் மல்லிகார்ஜூன் பேச்சுவார்த்தை நடத்தியபின் கலைந்து சென்றனர்.

