/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தெருவிளக்கு பொதுமக்கள் கோரிக்கை
/
திருப்புவனத்தில் தெருவிளக்கு பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜன 01, 2025 07:37 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் விரிவாக்க பகுதிகளிலும் தெருவிளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் வளர்ந்து வரும் நகரமாகும். நாளுக்கு நாள் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் புதுப்புது குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன.
பாக்யாநகர், சேதுபதிநகர், எஸ்.எம்.எஸ்., நகர், சிவ சிவா நகர் என ஏராளமான நகர்கள் உருவாகி வருகின்றன. மதுரையில் இருந்து திருப்புவனம் வரும் பொதுமக்கள் மின்வாரிய பஸ் ஸ்டாப், வேலம்மாள் பள்ளி பஸ் ஸ்டாப், சிவகங்கை ரோடு பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் இறங்கி பாக்யாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
திருப்புவனம் நெல்முடிகரை சுடுகாட்டை கடந்து அதன்பின் பெட்ரோல் பல்க், மருதமரம், எஸ்.எம்.எஸ். நகர் வரை சாலையோரம் தெரு விளக்குகளே இல்லை. இருட்டிலேயே செல்ல வேண்டியுள்ளது.
பைபாஸ் ரோட்டை ஒட்டியுள்ள தனியார் பள்ளி அருகே ரயில்வே மேம்பால கருவேல மரக்காட்டினுள் போதை கும்பல் தகராறில் ஈடுபடுகின்றனர்.
பெண்கள், சிறுவர்கள் பஸ்சில் இருந்து இறங்கிய பின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடன் செல்ல வேண்டியுள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரு விளக்கு வசதி வேண்டி மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.எனவே மாவட்ட நிர்வாகம் விரிவாக்க பகுதிகளுக்கு தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

