ADDED : நவ 04, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார்.
மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, உபகரணங்கள் வழங்கப்பட்டன. 314 மனுக்கள் பெறப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், கலெக்டர் பி.ஏ., (பொது) விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்டம் அனீஷ் சத்தார் பங்கேற்றனர்.

