ADDED : ஜன 02, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; தேவகோட்டை தாலுகா கல்லங்குடி கிராமத்தில் ஜன.,8 ல் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கல்லங்குடி கிராமத்தில் அன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் மக்கள் தொடர்பு முகாமில், அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் துறை சார்ந்த புகார்களை தெரிவித்து, தீர்வு பெற்று செல்லலாம். மேலும் அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம், என்றார்.

