ADDED : ஜன 09, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கல்லங்குடியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 108 பயனாளிகளுக்கு ரூ.8.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார். முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.
இலவச வீட்டு மனை பட்டா, இ- பட்டா, வாரிசு சான்று, விதவை சான்று உட்பட பல்வேறு துறைகள் மூலம் 108 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 279 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
யாவரும் கேளிர்' திட்டம் மூலம் நடந்த ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்ற கல்லங்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பதக்கம், சான்றினை வழங்கினார். தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், துணை கலெக்டர் ஜெயமணி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், தாசில்தார் சேதுநம்பு பங்கேற்றனர்.

